Tuesday 12 June 2012

பூலோக தேவதை ஜென்னி!!!



 தெய்வங்களும் என்னை விட்டு விலகின
பொழுதில் என்னை ஒரு தேவைதையாய்
வந்து தாங்கியவள் - ஜென்னி (காரல் மார்க்ஸ்ன் மனைவி)

(தன் மனைவியின் அன்பை பற்றி காரல் மார்க்ஸ்ன் கூற்று) 

பிறப்பும், இறப்பும்

மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர்
மீண்டும் இறக்க வேண்டும் - சல்மான் ருஸ்டி    

Saturday 9 June 2012

சோமாலியா . . .

 

 

 

 

சோமாலியா . . . சோக பூமியா. . .
மழலையின் பசி அறிந்தும் பாலூட்ட முடியா நிலை, மார்பிறிந்தும், கை பிசைந்து கண்ணில் நீர் கசிந்து வாடுவது சோமாலிய பெண்களின் இன்றைய நிலை..

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 29 ஆயிரம் பிஞ்சுகளை எமனுக்கு வாரி கொடுத்துள்ளனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, ஒட்டிய வயிறுக்கு ஒருபிடி சோறு இல்லாமல் மடிந்துள்ளனர்.


சோமாலியாவில் 20 வருடங்களாக கலவரங்கள் நடைபெறுவதும், அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் சர்வசாதரணமாக மாறிவிட்டாலும், குழந்தைகளின் இறப்பு நெஞ்சை பதைப்பதைக்க செய்கிறது..


வறட்சியால் வாழ்வை தொலைத்து வாழ வழியின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவை கொண்டு சேர்ப்பது ஐநாவின் கடமை தானே. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல கை கட்டி, வாய் பொத்தி எட்டிநின்று வேடிக்கை பார்க்கின்றன சில வளர்ந்த நாடுகள்.


பட்டினிச்சாவு, உள்நாட்டு போர் என இந்த ஈவு இறக்கமற்ற நிலை என்று மாறும் . . . மரணத்தைக்கூட இயல்பாக பார்க்கும் அளவுக்கு நம் மனநிலை மாறிவிட்டதா என்ன? 

நன்றி:நூலகம்.காம் 

பெண் மனம்!!!


ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டவள் பெண். ஆனால் அவர்களால் தான் எல்லோருக்குமான சந்தோசங்களை சமைக்க முடியும். இருப்பதை வைத்து சிறப்பாக இருப்பது பெண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். கிட்டிக்கு மரம் ஒடிக்கிற ஆண்கள் மத்தியில், உலகத்தில் மரபாச்சி பொம்மைகளுக்கும் சோறுட்டுவது பெண் மனம்...

அப்புறம் என்ன???

இப்போதெல்லாம்
சில நேர உரையாடலுக்குப் பிறகு
பேசுவதற்கு எதுவுமில்லாமல் போய் விடுகிறது...
"அப்புறம்" என்ற வார்த்தையை தவிர...... 

ஆனால் மௌனமாகிப் போகும் மனதிற்குள்
தொடர்ந்து அலறும் குரலை மொழி பெயர்க்க
எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது..??

Tuesday 29 May 2012

என் முதற் கவிதை...


உன்னையே  நான் தொடந்து கொண்டிருப்பதால்
தான் என்னவோ, என் பரிட்சையும் என்னை
தொடந்து கொண்டு வருகிறது போலும்!!!!