சோமாலியா . . .
சோமாலியா . . . சோக பூமியா. . .
மழலையின் பசி அறிந்தும் பாலூட்ட முடியா நிலை, மார்பிறிந்தும், கை
பிசைந்து கண்ணில் நீர் கசிந்து வாடுவது சோமாலிய பெண்களின் இன்றைய நிலை..
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 29 ஆயிரம் பிஞ்சுகளை எமனுக்கு வாரி
கொடுத்துள்ளனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, ஒட்டிய வயிறுக்கு
ஒருபிடி சோறு இல்லாமல் மடிந்துள்ளனர்.
சோமாலியாவில் 20 வருடங்களாக கலவரங்கள் நடைபெறுவதும், அப்பாவி மக்கள்
உயிரிழப்பதும் சர்வசாதரணமாக மாறிவிட்டாலும், குழந்தைகளின் இறப்பு நெஞ்சை
பதைப்பதைக்க செய்கிறது..
வறட்சியால் வாழ்வை தொலைத்து வாழ வழியின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு
உணவை கொண்டு சேர்ப்பது ஐநாவின் கடமை தானே. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது
என்பதுபோல கை கட்டி, வாய் பொத்தி எட்டிநின்று வேடிக்கை பார்க்கின்றன சில
வளர்ந்த நாடுகள்.
பட்டினிச்சாவு, உள்நாட்டு போர் என இந்த ஈவு இறக்கமற்ற நிலை என்று
மாறும் . . . மரணத்தைக்கூட இயல்பாக பார்க்கும் அளவுக்கு நம் மனநிலை
மாறிவிட்டதா என்ன?
நன்றி:நூலகம்.காம்
No comments:
Post a Comment